Posts

#கருப்புவெள்ளைகொலபஸ்குரங்கு (#Colobusguereza)

Image
 கருப்பு வெள்ளை கொலபஸ் குரங்கு (Colobus guereza) #BlackandWhiteColobusMonkey         ¶ நீளமான உடலும் பட்டு போன்ற நீளமான முடிகளும் கொண்ட இக்குரங்கின் பெயர் கருப்பு வெள்ளை கொலபஸ் குரங்கு (Black-and-White Colobus Monkey)         ¶ உடல் முழுவதும் கருப்பு வண்ண முடிகளும்,  முதுகில் வளைந்த U வடிவத்தில் நீளமான வெள்ளை முடிகளும் உள்ளது இக்குரங்கிற்கே உரிய தனிச்சிறப்பு.          ¶ இதன் வாலின் நுனியில் இருக்கும் அழகிய வெள்ளை நிற கொத்து முடி இதற்கு மேலும் அழகு கொடுக்கிறது.        ¶ பதினைந்திற்கும் மேற்பட்ட மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இக்குரங்குகள் பரவலாக காணப்படுகின்றன.         ¶ கொலாபினே(Colobinae) குடும்பத்தைச் சார்ந்த பழைய உலக குரங்குகள்(Old World Monkey) இவை. வாழிடம்          ¶ ஆற்றங்கரையோர அடர்த்தி மிகுந்த காடுகள், மரங்கள் நிறைந்த புல்வெளிகள், முதல் நிலை & இரண்டாம் நிலை காடுகள் இவையே இதன் வாழிடமாகும்.       ¶ இக்குரங்குகள் மிக ப...

#Moeritherium

Image
 Moeritherium..     ¶ It wasn'tdirectly related to modern Elephants, but Represent a very early stage in the Evolution of Elephants. Food: Soft water vegetation. Size :  Height-2 ft, Length- 8ft, Weight- 235Kg.      ¶ Extinct around 10,500years ago.      ¶ 1st discovered in Egypt neat Lake Moeris (in 1901).

World Orangutan Day

Image
 #WorldOrangutanDay Habitat: Sumatra & Borneo.      ¶ The most iconic victim of Palm industry.      ¶ 2000 - 3000 orangutans slaughtered           every year. ¶ Our closest relative: Share 97% of the       same DNA. Types: 1. Sumatran Orangutan: Pongo abelii. 2. Bornean Orangutan:  Pongo pygmaeus. 3. Tapanuli Orangutan: Pongo tapanuliensis.

#பாலிபுலிகள்

Image
 ஒரு காட்டு ராஜா அழிந்த கதை...! (#பாலிபுலிகள்/ #BaliTiger)             இந்தோனீசியதீவு கூட்டத்திலுள்ள பாலி தீவை வாழ்விடமாகக் கொண்ட புலிகள் இவை. பனியுகத்தில் இவை சன்டா தீவுக்கூட்டம்(Sunda Island- மலாய் தீபகற்பம், சுமத்ரா, போர்னியோ, ஜாவா பாலி) முழுமையும் ஆட்சி செய்துள்ளன. அக்காலகட்டத்தில் ஜாவா புலிகளும், பாலி புலிகளும் ஒரே இனமாகவே இருந்துள்ளன. பனியுகத்தின் முடிவில் ஜாவா மற்றும் பாலி தீவுகள் தனித்தனியாக பிரிந்த பின்பே இவை தனித்தனி இனங்களாக மாறியுள்ளன.  பாலித்தீவு மக்களும் புலிகளும்:        பாலி தீவு மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவை இப்புலிகள். மரபுவழி கதைகளும், நம்பிக்கைகளும் பாலி புலிகளை சுற்றியே இன்றும் அங்கு வலம் வருகின்றன. நம்மூரில் புலிப் பல், புலி நகம் அணிவதை போலவே பாலி மக்களும் புலியின் உடல் பாகங்களாலான ஆபரணங்கள் அணிவதை பெருமையாகவும், தங்களுக்கு உடல் வலிமை தரும் விஷயமாகவும் கருதிவந்தனர்.  உருவ அமைப்பு:         புலி இனங்களிலேயே மிகச்சிறியது இவையே. சைபீரிய புலிகளை விட உருவத்தில் பாதி அளவே இருக்...

இளஞ்சிவப்பு தேவதை நல்லங்கு

Image
 #இளஞ்சிவப்புதேவதைநல்லங்கு/ #PinkFairyArmadillo             கவசம் அணிந்த தேவதைகளை பார்த்துள்ளீர்களா...? வழுவழுப்பான மஞ்சளும் வெள்ளையும் கலந்த பட்டு போன்ற முடிகளின் மேல், மிகச் சிறிய இளஞ்சிவப்பு நிற கவசத்தை அணிந்துள்ள இந்தக் குட்டி விலங்குகளுக்கு தான் இளஞ்சிவப்பு தேவதை நல்லங்கு (Chlamyphorous truncatus) என்று பெயர்.              பாலூட்டிகளிலே கவசமணிந்த ஒரே விலங்கினம் நல்லங்குகளே. இவற்றின் பின்புறம் எலும்பாலான தகட்டினால் போர்த்தப்பட்டிருக்கும். ஆபத்து வரும்போது ஒரு பந்தைப் போல சுருண்டு கொள்ளும். நல்லங்குகளில் 9 பேரினங்கள் உள்ளன. அவற்றில் மிகப் பெரியவை அடர் பழுப்பு பெரும் நல்லங்கு (Dark Brown Giant Armadillo). மிகச் சிறியவை நம்முடைய தேவதை நல்லங்குகள்.              ¶எவ்வளவு சிறியவை தெரியுமா..? நம் உள்ளங்கைக்குள் இந்த குட்டி தேவதைகளை வைத்து ரசிக்கலாம்...! ¶தனித்துவமான குணங்கள்:              பாலைவனத்தை வாழிடமாக கொண்ட, தனிமையை விரும்பும் இரவு நேர விலங...